GM அலுவலக கிளையின் 11வது மாநாடு, 09.01.2025 அன்று, சேலம் GM அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் R. லோகநாதன், கிளை உதவி தலைவர், தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, சங்க கொடியை, விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, மூத்த தோழர், தோழர் P. ராதாகிருஷ்ணன், TT ஏற்றி வைக்க, மாநாட்டு அரங்கில், மாவட்ட உதவி தலைவர் தோழர் R. முருகேசன் அஞ்சலியரை நிகழ்த்தினார். GM அலுவலக கிளை செயலர் தோழர் J. சீனிவாசராஜு வரவேற்புரை வழங்கினார்.
மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து, BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன், துவக்கவுரை வழங்கினார். அவரை தொடர்ந்து, TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K. ராஜன், மாவட்ட செயலர் தோழர் M. செல்வம், AIBDPA மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜூ, BSNLEU மாவட்ட உதவி தலைவர் தோழர் P. செல்வம், மூத்த தோழர்கள் தேவா, சண்முகசுந்தரம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E. கோபால் மாநாட்டு பேருரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கிளைச் செயலர் செயல்பாட்டு அறிக்கையை தாக்கல் செய்தார். கிளை பொருளர் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தார். இரண்டும் ஏக மனதாக ஏற்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர்கள் R. லோகநாதன், R. முருகேசன், R. சங்கர் முறையே தலைவர், செயலர், பொருளராக கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. புதிய கிளை பொருளர் தோழர் R. சங்கர் நன்றி கூறி, மாநாட்டை நிறைவு செய்தார்.
அன்பான உபசரிப்பு, GM அலுவலகம் முழுவதும் கொடிகள், தோரணங்கள், முறையான அறிக்கை, வரவு செலவு, சுமார் 90% உறுப்பினர்களின் பங்கேற்பு என சிறப்பாக மாநாடு நடைபெற்றது. நகரப் பகுதி கிளைச் செயலர்கள் தோழர்கள் C. மாணிக்கம், N. சிவக்குமார், M. ஜோதி சிவம், முன்னனி ஊழியர் தோழர் P. பத்மநாபன், AIBDPA நகர கிளை செயலர் தோழர் D. சுப்ரமணி உள்ளிட்ட தோழர்களின் பங்கேற்பு சிறப்பாக இருந்தது.