24.12.2024 மாவட்ட செயற்குழு முடிவின் அடிப்படையில், நாமக்கல், பரமத்தி வேலூர், ராசிபுரம் கிளைகளின் இணைந்த 11வது கிளை மாநாடு, 10.01.2025 அன்று நாமக்கல் கோட்டை அருகே உள்ள, நமது தொலைபேசி நிலையத்தில், சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் K. தங்கவேல், R. குழந்தைசாமி கூட்டுத் தலைமை ஏற்று, தலைமை குழுவாக செயல்பட்டனர். முதல் நிகழ்வாக, சங்க கொடியை விண்ணெதிரும் கோஷங்களுக்கு இடையே, தோழர் M. பாலசுப்ரமணியன், கிளை செயலர் நாமக்கல் ஏற்றி வைத்தார். பின்னர் மாநாட்டு அரங்கில், தோழர் S. கணேசன், கிளை செயலர், ராசிபுரம் அஞ்சலியுரை நிகழ்த்த, மீண்டும் தோழர் M. பாலசுப்பிரமணியன், கிளை செயலர், நாமக்கல் அனைவரையும் வரவேற்றறார்.
மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து, BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன் துவக்கவுரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, BSNLEU தமிழ் மாநில அமைப்பு செயலாளர் தோழர் R. ரமேஷ், AIBDPA மாநில அமைப்பு செயலர் தோழர் S. அழகிரிசாமி, TNTCWU மாநில பொருளர் தோழர் C. பாஸ்கர், ஆகியார் வாழ்த்துரை வழங்கினார்கள். BSNLEU மாவட்ட செயலர் தோழர் E. கோபால் மாநாட்டு சிறப்புரை வழங்கினார்.
மூன்று கிளை செயலர்களும் தனித்தனியே தாக்கல் செய்த செயல்பாட்டு அறிக்கை, ஏக மனதாக ஏற்கப்பட்டது. மூன்று கிளைகளின் வரவு செலவு கணக்குகளை, சம்பந்தப்பட்ட பொருளாளர்கள் தாக்கல் செய்ததையும், மாநாடு ஏகமனதாக ஏற்றது. பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் மூன்று கிளைகள் இணைக்கப்பட்டு ஒரே கிளையாக நாமக்கல் கிளை என்ற பெயரோடு உருவாக்கியதில், தோழர்கள் R. லதா, R. ரமேஷ், V. ராஜ்குமார் முறையே தலைவர் செயலர் பொருளராக கொண்ட நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி, BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் R. ஸ்ரீனிவாசன், M. சண்முகம், K. செல்வராஜ், திருச்செங்கோடு கிளை செயலர் தோழர் V. பரந்தாமன், AIBDPA மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் V. கோபால், K. M. செல்வராஜ், M ராஜலிங்கம் ,P.M ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேலூர் கிளை பொருளாளர் தோழர் K. சஞ்சீவி நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார். புதிய நிர்வாகிகளின் பணி சிறப்பாக அமைய, மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.
நேர்த்தியான திட்டமிடல், சிறப்பான செயல்பாட்டு அறிக்கை, முறையான வரவு செலவு கணக்கு, அமைதியான சூழல், உறுப்பினர்களின் சிறப்பான பங்கேற்பு, விவாதம், தலைவர்களின் எழுச்சிமிகு உரை என மலைக்கோட்டை மாநாடு மகிழ்ச்சியாக இருந்தது. சிறப்பான ஏற்பாடுகள் செய்த, நாமக்கல், ராசிபுரம், பரமத்தி வேலூர் பகுதி தோழர்களே, மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.