Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, January 6, 2025

அற்புதமாய் நடைபெற்ற ஆத்தூர் கிளை மாநாடு


24.12.2024 மாவட்ட செயற்குழு முடிவின் அடிப்படையில், நமது மாவட்டத்தில், கிளை மாநாடுகள் நடைபெற துவங்கி விட்டது. முதல் கிளையாக, ஆத்தூர் கிளையின் 11வது மாநாடு, 02.01.2025 அன்று, ஆத்தூரில் சிறப்பாக நடைபெற்றது. கிளை தலைவர் தோழர் M. சேகர் தலைமையேற்க, முதல் நிகழ்ச்சியாக, சங்க கொடியை தோழர் A. ராஜேந்திரன்  விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைக்க, பட்டாசு வெடித்து, முழக்கம் ஏழுப்பட்டது. பின்னர் மாநாட்டு அரங்கில், தோழியர் S. ராணி, அஞ்சலியுரை நிகழ்த்த, கிளை செயலர் தோழர் A. அருள்மணி அனைவரையும் வரவேற்றார். 

மாநாட்டை முறைபடி துவக்கி வைத்து, தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன் துவக்கவுறை வழங்கினார்.மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் K. ராஜன், R. சீனிவாசன், G. R. வேல்விஜய் வாழ்த்துரை வழங்கினார்கள். AIBDPA மாவட்ட உதவி செயலர் தோழர் P குமாரசாமி, TNTCWU கிளைச் செயலர் தோழர் R. சிவந்தன் ஆகியோர் தோழமை சங்கங்கள் சார்பாக வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாவட்டச் செயலர் தோழர் E. கோபால், மாநாட்டு சிறப்புரை வழங்கினார். அவர் தம் உரையில், BSNL நிறுவனத்தின் தற்போதைய நிலை, மூன்றாவது ஓய்வூதிய மாற்றம், இரண்டாவது VRS திட்டம், தள மட்டத்தில் தீர்க்கப்பட்ட பிரச்சனைகள், ஆத்தூர் கிளையின் சிறப்பான செயல்பாடு உள்ளிட்ட விஷயங்களை விளக்கி சிறப்புரையாற்றினார்.

செயல்பாட்டு அறிக்கை, நிதி நிலை அறிக்கை சமர்பிக்கபட்டு, ஏக மனதாக ஏற்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில், தோழர்கள் M. சேகர், G. R.  வேல் விஜய் S. ராணி ஆகியோர், முறையே தலைவர், செயலர், பொருளராக கொண்ட நிர்வாகிகள் பட்டியல், ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றிய பின், தோழர் S. K. சுப்ரமணியன்,  நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார். 

BSNLEU ஆத்தூர் கிளை தோழர்கள், மாநாட்டில் முழுமையாக பங்கு பெற்றனர்.  AIBDPA, TNTCWU தோழர்களும் திரளாக மாநாட்டில் கலந்து கொண்டனர். செயல்பாட்டு அறிக்கை சிறப்பாக இருந்தது. கொடிக்கம்பம் துவங்கி, மாநாட்டு அறை வரை கொடிகள் கட்டப்பட்டிருந்தது. மாநாட்டு அரங்கில் தோரணங்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாநாடு நிறைவு பெற்றவுடன் சுவையான சிற்றுண்டி வழங்கப்பட்டது.சிறப்பான ஏற்பாடுகள் செய்து விமர்சையாக, கிளை மாநாட்டை நடத்திய ஆத்தூர் கிளைக்கு, மாவட்ட சங்கத்தின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள். புதிய நிர்வாகிகள் பணி சிறக்க தோழமை வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்