சேலம் நகர கிளைகள், மெயின், செவ்வை, மெய்யனூர் கிளைகள் இணைந்த 11வது மாநாடு, சேலம் மாவட்ட BSNLEU சங்க அலுவலகத்தில், 07.01.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் C. மாணிக்கம், B. வீரேஷ் குமார், M. செல்வகுமார் ஆகியோர் கூட்டுத் தலைமை பொறுப்பை ஏற்றனர்.
முதல் நிகழ்வாக விண்ணத்திரும் கோஷங்களுக்கு இடையே, மாவட்ட உதவி செயலர் தோழர் K. ராஜன் சங்க கொடி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாநாட்டு அரங்கில் தோழர் M. ஜோதிசிவம், கிளைச் செயலர் மெய்யனூர், அஞ்சலியுரை வழங்க, செவ்வை கிளை செயலர் தோழர் N. சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, AIBDPA மாவட்ட தலைவர் தோழர் M. மதியழகன், TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K. ராஜன், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் R. முருகேசன், R. சீனிவாசன், P. செல்வம், D. பிரசாத், R. ராதாகிருஷ்ணன், K. சின்னசாமி, தணிக்கையாளர் தோழியர் C. லாவண்யா, ஓய்வு பெற்ற தோழர்கள் மணி, பன்னீர் செல்வம், தேவா, வெள்ளையப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
BSNLEU மாவட்ட செயலர் தோழர் E. கோபால் மாநாட்டு பேருரை வழங்கினார்.
மூன்று கிளைச் செயலர்கள், தனித்தனியே தாக்கல் செய்த செயல்பாட்டு அறிக்கை, நிதிநிலை அறிக்கை ஏக மனதாக ஏற்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் கீழ்க்கண்ட தோழர்களை கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டது.
சேலம் மெயின்
தோழர்கள்
தலைவர்: K. சின்னசாமி, JE
செயலர்: C. மாணிக்கம், JE
பொருளர்: N. லதா, ATT
சேலம் செவ்வை
தோழர்கள்
தலைவர்: B. வீரேஷ்குமார், JE
செயலர்: N. சிவக்குமார், TT
பொருளர்: K. லோகநாதன், TT
மெய்யனூர் கிளை
தோழர்கள்
தலைவர்: S. ஜெயசீலன், TT
செயலர்: M. ஜோதிசிவம், TT
பொருளர்: P. சந்திரன், JE
மூன்று கிளைகளை சார்ந்த தோழர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், மாநாட்டில் திரளாக கலந்து கொண்டனர். செயல்பாட்டு அறிக்கை, நிதிநிலை அறிக்கை முறையாக வழங்கப்பட்டது தோழர்களின் விவாதம் நடைபெற்றது. மாவட்ட மாநில மாநாட்டு நன்கொடைகள் வழங்கப்பட்டது. சேலம் மெயின் கிளை செயலர் தோழர் P. பத்மநாபன் நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார்.
நம்பிக்கையூட்டும் விதத்தில் நடைபெற்ற நகர கிளைகளின் மாநாடு சிறப்பாக இருந்தது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட, மூன்று கிளை சங்க நிர்வாகிகளுக்கும், மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்