Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, January 6, 2025

பாரம்பரியத்தை கட்டிக் காத்த, திருச்செங்கோடு கிளை மாநாடு!


04.01.2025 அன்று திருச்செங்கோடு கிளையின் 11வது மாநாடு திருச்செங்கோட்டில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயற்குழு முடிவின் அடிப்படையில், திருச்செங்கோடு - சங்ககிரி கிளைகள் இணைப்பு மாநாடாக 11வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் K. சண்முகசுந்தரம்,  தோழர் R. சரவணன் கூட்டு தலைமை ஏற்றனர். முதல் நிகழ்வாக, சங்க கொடியை விண்ணதரும் கோஷங்களுக்கு இடையே, தோழர் S. தங்கராஜூ ஏற்றி வைக்க, மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் A. உதயகுமார் அஞ்சலி உரை நிகழ்த்தினார். சங்ககிரி கிளைச் செயலர் தோழர் C. கணேசன் முன்னிலை வகிக்க, திருச்செங்கோடு கிளைச் செயலர் தோழர் V. பரந்தாமன் வரவேற்புரை வழங்கினார்.

ஆய்படு பொருள் ஏற்புக்கு பின், 11வது கிளை மாநாட்டை, முறைப்படி துவக்கி வைத்து, தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன், துவக்கவுரை வழங்கினார். BSNLEU தமிழ் மாநில அமைப்புச் செயலர் தோழர்  R. ரமேஷ், AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, மாநில அமைப்பு செயலர் தோழர் S. அழகிரிசாமி, TNTCWU  மாவட்ட தலைவர் தோழர் . K. ராஜன், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M. சண்முகம், R. ஸ்ரீனிவாசன்,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E. கோபால், மாநாட்டு பேருரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கிளைச் செயலர் செயல்பாட்டு அறிக்கை தாக்கல் செய்தார். கிளை உதவிபொருளர் வரவு செலவு கணக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இரண்டும் ஏகமானதாக ஏற்றப்பட்ட, பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வை மாவட்ட செயலர் தோழர் E. கோபால் நடத்தி வைத்தார். அதன்படி, தோழர்கள் K. சண்முகசுந்தரம், V.  பரந்தாமன், A. உதயகுமார் முறையே, தலைவர், செயலர், பொருளராக கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை AIBDPA  தோழர்கள் P. தங்கராஜூ, M. ராஜலிங்கம் வாழ்த்தி பேசினார்கள. மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர் A. தாமரை செல்வன் நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார். நேர்த்தியான திட்டமிடல், அமைதியான சூழல், கொடிகள், தோரணங்கள், சுவையான உணவு என சிறப்பான ஏற்பாடுகள் செய்த திருச்செங்கோடு கிளையை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பணி சிறப்பாக அமைய, மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்