Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, January 1, 2025

BSNLலில் 2ஆவது VRS - முடிவை திரும்பப் பெறுக என BSNLEU, CMD BSNLக்கு கடிதம்


BSNLலில் 2ஆவது விருப்ப ஓய்வு திட்டத்தை அமலாக்கும் முன் மொழிவிற்கு, BSNL இயக்குனர் குழு ஒப்புதல் வழங்கி விட்டதாக, நம்பகமான செய்தி வந்துள்ளது. BSNLலின் வருமானத்தில், 38 சதவிகிதம் என்கிற பெரிய தொகை, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, செலவிடப் படுவதாக வாதிடப்பட்டுள்ளது. மூன்று புத்தாக்கத் திட்டங்கள் அமலாக்கப்பட்ட பின்னாலும், BSNLலின் வருவாயில், எந்த ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் இல்லை என்ற உண்மையை, அரசாங்கமும், BSNL நிர்வாகமும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன. BSNL, 4G சேவை துவங்குவதில் ஏற்பட்டு வரும் அதீத காலதாமதம், TCS வழங்கியுள்ள தரக்குறைவான 4G கருவிகள், சேவையின் தரம் குறைந்த காரணத்தால் பெருமளவில் சரண்டர் ஆகும் FTTH இணைப்புகள் ஆகியவைகள் தான், BSNLன் வருமானம் குறிப்பிடத்தக்க அளவு உயராமல் இருப்பதற்கு காரணம்.அரசாங்கத்தின் தவறான கொள்கைகளையும், BSNL நிர்வாகத்தின் செயல் திறன் அற்ற தன்மையையும் சரி செய்யாமல், BSNLன் நிதி நெருக்கடிக்கு, இரண்டாவது விருப்ப ஓய்வு திட்டம் தான் வழி என்று சொல்லப் படுகிறது.

BSNLலில் இரண்டாவது விருப்ப ஓய்வு திட்டம் அறிமுகப்படுத்துவது என்பது, BSNL நிறுவனத்தை, ஒரு நலிவடைந்து நிறுவனமாக மாற்றி, தனியார் மயமாக்கல் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை பார்ப்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதுதான், BSNL ஊழியர் சங்கத்தின் உறுதியான கருத்து. BSNLலில் முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருக்கின்ற காரணத்தினால், இரண்டாவது விருப்ப ஓய்வு திட்டம், BSNLலுக்கு ஒட்டுமொத்தமாக தேவையற்ற ஒன்று என்பதை சுட்டிக்காட்டி, நிர்வாகத்திற்கு கடிதம் எழுத வேண்டியது அவசியம் என நாங்கள் கருதுகிறோம்.  எனவே, BSNLலில் இரண்டாவது விருப்ப ஓய்வு திட்டத்தை அமலாக்குவது என்கின்ற அவர்களது முடிவை, BSNL இயக்குனர் குழு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, CMD BSNLக்கு,  BSNL ஊழியர் சங்கம், 30.12.2024 அன்று ஒரு விரிவான கடிதம் எழுதி உள்ளது.

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்