05.02.2025, அன்று செவ்வை தொலைபேசி நிலைய 7வது மாடி கூட்ட அரங்கில், நமது மாவட்ட சங்கத்தின் 11வது மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு, மாவட்ட தலைவர், தோழர் S. ஹரிஹரன், தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, தேசிய கொடியை, தோழர் P. செல்வம் , DVP ஏற்றி வைக்க, தோழர் K. ராஜன், ADS, விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, சங்க கொடியை ஏற்றி வைத்தார். நெஞ்சுரமேற்றும் தியாகிகள் ஸ்தூபிக்கு செவ்வணக்கத்தை உரித்தாகியபின், தோழர்கள் மாநாட்டு அரங்கிற்குள் நுழைந்தனர். தோழர் R. ஸ்ரீனிவாசன், ADS அஞ்சலியுறை வழங்கியபின், மாவட்ட செயலர் தோழர் E. கோபால், அனைவரையும் வரவேற்றார். தலைமையுரைக்கு பின், தமிழ் மாநில செயலர் தோழர் P. ராஜு , மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். அவர்தம் உரையில், ஒன்றிய அரசின் பொதுத்துறை விரோத கொள்கைகள், ஒன்றிய அரசின் பட்ஜெட், தேசிய பணமாக்கல் திட்டம், சர்வதேச அரசியல், மாநில சங்க செயல்பாடுகள் உள்ளிட்ட விஷயங்களை விளக்கி பேசினார்.
பின்னர் BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு, BSNLWWCC புனரமைப்பு மாநாடு துவங்கியது. தோழியர் D. கவிதா மாநில குழு உறுப்பினர், தலைமை தாங்கினார். தோழியர் G. உமாராணி, மத்திய குழு உறுப்பினர் சிறப்புரையாற்றினார். பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அகில இந்திய உதவி பொது தோழர் S. செல்லப்பா மாநாட்டு பேருரை வழங்கினார். அவர்தம் உரையில், மூன்றாவது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், NEPP பதவி உயர்வு கொள்கைகளில் மாற்றம், இலாக்கா தேர்வுகள், மத்திய சங்க செயல்பாடுகள், BSNL நிறுவனத்தின் நிலை உள்ளிட்ட விஷயங்களை விளக்கி பேசினார்.
பின்னர் நடைபெற்ற சேவை கருத்தரங்கில், உயர்த்திரு ரவீந்திர பிரசாத், ITS., சேலம் பொது மேலாளர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். அவர்தம் உரையில், BSNL நிறுவனம் சந்திக்கும் சவால்கள், 4G / 5G சேவைகள், வருவாய், FTTH சேவைகள் உள்ளிட்ட விஷயங்களை விளக்கினார். தோழமை சங்கங்கள் சார்பாக, தோழர் K. ஜெயக்குமார் , SEWABSNL, தோழர் B. மணிகுமார், AIGETOA, தோழர் K. ஸ்ரீனிவாசன் , SNEA, தோழர் S. தமிழ்மணி, AIBDPA மாவட்ட செயலர், BSNLEU தர்மபுரி மாவட்ட செயலர் தோழர் P. கிருஷ்ணன், BSNLEU ஈரோடு மாவட்ட செயலர் தோழர் S. பாலு, தோழர் S. அழகிரிசாமி, AIBDPA மாநில அமைப்பு செயலர், தோழர் M. செல்வம், மாவட்ட செயலாளர், TNTCWU, தோழர் C. பாஸ்கர், மாநில பொருளாளர், TNTCWU ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
உணவு இடைவேளைக்குப்பின், நடைபெற்ற பொருளாய்வுக்குழுவை தோழர் R. ரமேஷ் மாநில அமைப்பு செயலர் துவக்கி வைத்தார். மாவட்ட செயலர் தோழர் E. கோபால், மாநாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட பொருளர் தோழர் M. சண்முகம் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். மாநாட்டு அறிக்கை, வரவு செலவு அறிக்கை, ஏகமனதாக ஏற்கப்பட்டது.
அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் S. செல்லப்பா, சார்பாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்து விளக்கவுரை வழங்கினார். பின்னர் மாநில செயலர், புதிய நிர்வாகிகள் தேர்வை நடத்தி வைத்தார். தோழர்கள் R. ஸ்ரீனிவாசன், S. ஹரிஹரன், R. ரமேஷ் முறையே, தலைவர், செயலர், பொருளாராக கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றியபின், பொறுப்பில் இருந்து விடுபடும் மாவட்ட சங்க நிர்வாகிகளை, AGS மற்றும் மாநில செயலர் கௌரவப்படுத்தினார்கள். தோழர் K. சண்முகசுந்தரம், புதிய மாவட்ட உதவி தலைவர், நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார்.
வரவேற்பு குழு தோழர்களும், கொடிகள், தோரணங்கள், அமைதியான இடம், சுவையான உணவு, அன்பான உபசரிப்பு என அணைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர். வரவேற்பு குழு தோழர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். தகுதி ஆய்வு குழு படிவங்கள் படி, சுமார் 200 தோழர்கள் மாநாட்டில் பங்குபெற்றுள்ளனர். மாநாட்டில் திரளாக கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றிகள். தோழர்களின் வருகையை உத்திரவாதப்படுத்திய கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்களுக்கு பாராட்டுக்கள்.