தோழமைக்குரிய உறவுகளுக்கு, வணக்கம்!.
ஊதிய மாற்றம் தொடர்பாக, நிர்வாகத்திற்கும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கும் இடையேயான விவாதம், 19.02.2025 அன்று நடைபெற்றது. நிர்வாக தரப்பில் இருந்து, ஊதிய மாற்றக் குழுவின் தலைவராக உள்ள திரு ராஜிவ் சோனி CGM (EW), திருமிகு அனிதா ஜோஹ்ரி PGM (SR & PERS), திரு ராம் கிஷன் DGM(ESTT), திருமிகு ஆஷா பவலியா DGM (SR), திரு சஞ்சீவ் குமார் AGM (ESTT) உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் சார்பாக, தோழர் P.அபிமன்யு GS BSNLEU மற்றும் தோழர் சந்தேஸ்வர் சிங் GS NFTE ஆகியோர் பங்கேற்றனர்.
நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட, ஊதிய தேக்கநிலை அடையக்கூடிய 90 நடப்பு உதாரணங்களின் அடிப்படையில், இன்றைய கூட்டத்தில், ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதங்கள் இறுதிப் படுத்துவது தொடர்பான, விரிவான விவாதங்கள் நடைபெற்றன. புதிய ஊதிய விகிதங்கள் தொடர்பாக, இரண்டு பொதுச் செயலாளர்களும் தெரிவித்த கருத்துக்களை, நிர்வாக தரப்பு பொறுமையாக கேட்டுக் கொண்டது. விரிவான விவாதங்களுக்கு பின், அடுத்த ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் கூட்டத்தை, 10.03.2025 அன்று நடத்த, நிர்வாக தரப்பும், இரண்டு சங்கங்களும் ஏற்றுக்கொண்டன. அந்தக் கூட்டத்தில், ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதங்கள் இறுதி செய்யப்படும்.
தோழன் ஹரி
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்