19.02.2025 அன்று, ஊதிய பேச்சு வார்த்தை குழுவின், நிர்வாக தரப்பு மற்றும் ஊழியர் தரப்பிற்கு இடையே நடைபெற்ற சாதாரண விவாதத்தின் போது, ஊதிய மாற்ற குழுவின் அடுத்த கூட்டம், 10.03.2025 அன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. எனினும், அதற்கான உத்தரவு இன்னும் வெளியிடப்படவில்லை. கூட்டத்திற்கான அறிவிப்பு முறையாக வழங்கப்பட வேண்டும் என, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, PGM (SR) திருமிகு அனிதா ஜோஹ்ரி அவர்களிடம், 24.02.2025 அன்று கேட்டுக் கொண்டார்.
ஊதிய மாற்ற குழுவின், நிர்வாக தரப்பு உறுப்பினர்களில் ஒருவரான, திரு S.P.சிங் PGM(ESTT) விடுப்பில் சென்றுள்ளதாகவும், அவர் வந்தவுடன் ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின், அடுத்த கூட்டத்திற்கான அறிவிப்பு, 28.02.2025 அன்று வெளியிடப்படும் என்றும் PGM (SR) தெரிவித்தார்.
தோழன் ஹரி
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்