திருச்செங்கோடு கிளை நிர்வாகி தோழர் S. தங்கராஜூ, TT., CSC., பணி நிறைவு பாராட்டு விழா திருச்செங்கோட்டில், 24.02.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. கோட்ட பொறியாளர் திரு வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திருமதி புவனேஸ்வரி, JTO CSC முன்னிலை வகித்தார். திருச்செங்கோடு கிளைச் செயலர் தோழர் V. பரந்தாமன் அனைவரையும் வரவேற்றார். BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் S. ஹரிஹரன், தோழரை வாழ்த்தி பேசி, சேலம் மாவட்ட சங்கம் சார்பாக தோழரை கௌரவப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து AIBDPA மாநில உதவி செயலர் தோழர் E. கோபால், AIBSNLPWA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. சின்னசாமி, AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, TNTCWU சேலம் மாவட்ட தலைவர் தோழர் K. ராஜன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
BSNLEU மாநில சங்கம் சார்பாக மாநில அமைப்பு செயலர் தோழர் M. சண்முகம், கூட்டத்தில் கலந்து கொண்டு தோழரை வாழ்த்தி பேசினார். BSNLEU சேலம் மாவட்ட தலைவர் தோழர் R. சீனிவாசன், மாவட்ட பொருளர் தோழர் R. ரமேஷ், மாவட்ட உதவி தலைவர்கள் தோழர்கள் K. சண்முகசுந்தரம், A. தாமரைச்செல்வன், மாவட்ட உதவி செயலர் தோழர் R. ராதாகிருஷ்ணன், GM அலுவலக கிளை செயலர் தோழர் R. முருகேசன், ஆகியோர் கலந்து கொண்டு தோழரை வாழ்த்தினார்கள்.
AIBDPA மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P. தங்கராஜூ, M. ராஜலிங்கம், TNTCWU மாவட்ட பொருளர் தோழர் V. குமார், BSNL அதிகாரிகள் திருவாளர்கள் மோகன்ராஜ், SDE, S. R. டெய்சி, JTO மற்றும் கலைச்செல்வி JTO உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு தோழரை கௌரவப்படுத்தினார்கள். தோழர் S. தங்கராஜூ, TT., CSC மற்றும் திருமதி தங்கராஜூ ஏற்புரை வழங்கினார்கள்.சுவையான உணவோடு, விழா இனிதே நிறைவு பெற்றது.