தோழமைக்குரிய உறவுகளுக்கு, வணக்கம்!.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் 4G BTSகளை, BSNL நிறுவனத்திற்கு, TCS நிறுவனம் வழங்குகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதில் ஏற்கனவே 60,000 4G BTSகள், நிர்மாணிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், எங்கெல்லாம் BSNLன் 4G சேவைகள் துவங்கப் பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் வாடிக்கையாளர்கள், சேவையின் தரம் தொடர்பாக, கடுமையான சிரமங்களை சந்திக்கின்றனர். 4G சேவைகள் துவங்கப்பட்ட பின், அவர்களால், குரல் அழைப்புகளை கூட பேச முடியவில்லை என்பதுதான், பெரும்பாலான BSNL வாடிக்கையாளர்களின் புகார் ஆகும்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்களின் கட்டணங்களை உயர்த்திய பின், பெருமளவிலான வாடிக்கையாளர்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, BSNLஐ நோக்கி வந்தனர். ஆனால், தற்போது நேர்மாறாக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நவம்பர் 2024 முதல், பெருமளவிலான BSNL வாடிக்கையாளர்கள், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களுக்கான பாராளுமன்ற குழு கூட, BSNLன் 4G சேவை தொடர்பான, தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. மேலும், BSNLன் 4G சேவையில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய, வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களை கூட அமர்த்தலாம் என, BSNL நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகவே, BSNL வாடிக்கையாளர்களின் துயரமும் தொடர்கிறது.
இந்தச் சூழ்நிலையில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களை, இந்த பிரச்சனையில் தலையிட்டு, BSNL 4G சேவையின் தரம், விரைவில் மேம்படுவதை உறுதி செய்ய வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம் அவருக்கு 20.02.2025 அன்று கடிதம் எழுதி உள்ளது.
தோழன் ஹரி
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்