மோசமான நான்கு தொழிலாளர் தொகுப்புகளை அமுல்படுத்த, மத்திய அரசாங்கம், அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது நடப்பில் உள்ள, 29 தொழிலாளர் நலச் சட்டங்களையும் ஒழித்துவிட்டு, அந்த இடங்களில் மோடி அரசாங்கம், இந்த நான்கு தொழிலாளர் தொகுப்புகளை கொண்டு வந்துள்ளது. தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை பறித்து, அவர்களை அடிமைகளாக மாற்றுவது தான், இந்த நான்கு தொழிலாளர் தொகுப்புகளின் நோக்கம். முதலாளிகளும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும், தொழிலாளர்களை எந்தவித தடங்களும் இன்றி சுரண்டி, தங்களின் லாபத்தை உயர்த்திக்கொள்ள வசதியாக தான், இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
10 மத்திய தொழிற் சங்கங்களும், இந்த நான்கு தொழிலாளர் தொகுப்புகளை, உறுதியாக எதிர்க்கின்றன. இந்த நான்கு தொழிலாளர் தொகுப்புக்களையும், நமது தோழர்கள் முழுமையாக புரிந்து கொள்ளும் விதமாக, ஒரு காணொளி காட்சி மூலமான கூட்டத்தை நடத்திட, BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மைய கூட்டம் முடிவு செய்துள்ளது.
அந்த முடிவின் அடிப்படையில், 25.03.2025 அன்று இரவு 8 மணிக்கு, இந்தக் கூட்டம் நடைபெறும். CITU சங்கத்தின் தேசிய செயலாளர், தோழர் K.N.உமேஷ் இந்த கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். நான்கு தொழிலாளர் தொகுப்புகளில் உள்ள விவரங்களை அவர் ஆங்கிலத்திலும், இந்தியிலும் விளக்குவார்.இந்த கூட்டத்தில் மாநிலச் செயலாளர்கள், மத்திய சங்க நிர்வாகிகள், மாநில சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவின் (BSNLWWCC) உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்பது என அகில இந்திய மையம் முடிவு செய்துள்ளது. இதற்கான இணைப்பு விரைவில் வழங்கப்படும்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்