ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் கூட்டத்தை நடத்துவதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம் தொடர்பான தமது கோபத்தை, BSNL ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு ஆகியோர், 19.03.2025 அன்று, திருமிகு அனிதா ஜோஹ்ரி PGM (SR) அவர்களிடம் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தை நடத்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம், ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர்கள் தெரிவித்தனர். அந்தக் கூட்டம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என அவர்கள் கோரினர்.
ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவில் உள்ள ஒரு சில அதிகாரிகள் இல்லாத காரணத்தால் இந்த கூட்டம் நடத்த இயலவில்லை என PGM (SR) பதிலளித்தார். எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்தார்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்