Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, March 27, 2025

மன நிறைவோடு நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழா!


தள மட்ட கவுன்சில் (LJCM) உறுப்பினரும், TNTCWU மாவட்ட தலைவரும், AIBDPA நகர பகுதி ஒருங்கிணைப்பாளருமான தோழர் K. ராஜன் அவர்களுக்கு, 24.03.2025 அன்று, சேலம் மெயின் தொலைபேசி நிலைய OCB கூட்ட அரங்கில், பணி நிறைவு பாராட்டு விழா எழுச்சியோடு நடைபெற்றது. BSNLEU பதாகையின்  கீழ் கொடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், AIBDPA - TNTCWU சங்கங்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் பின்னணியில், மாநாடு போல் நிகழ்ச்சி நடைபெற்றது. வரவேற்பு குழு தோழர்கள்,  மெயின் தொலைபேசி நிலையம் முழுவதும் கொடிகள், தோரணங்கள், என  அமர்க்களப்படுத்தி விட்டனர். 

BSNLEU மாவட்டத் தலைவர் தோழர் R. ஸ்ரீனிவாசன், விழாவிற்கு  தலைமை ஏற்க, மெயின் கிளை செயலர் தோழர் C. மாணிக்கம் வரவேற்புரை வழங்கினார். BSNLEU தமிழ் மாநில அமைப்பு செயலாளர் தோழர் M. சண்முகம் துவக்க உரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, TNTCWU  மாநில பொருளர் தோழர் C. பாஸ்கர், AIBDPA  மாநில அமைப்பு செயலர் தோழர் S. அழகிரிசாமி, AIBDPA  மாநில உதவி செயலர் தோழர் E. கோபால், TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M. செல்வம், AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் S. ஹரிஹரன் நிறைவுறை வழங்க, தோழர் K. ராஜன் ஏற்புரை வழங்கினார். மாவட்ட பொருளர் தோழர் R. ரமேஷ், நன்றி கூறி விழாவை, முடித்து வைத்தார்BSNLEU பதாகையின் கீழ் நடைபெறும் பணி நிறைவு பாராட்டு விழா என்பதால்,  மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். திரு C. பாஸ்கரன், DGM HQ தலைமையில் திரு G. சேகர், AGM, திரு P. பொன்ராஜ், AGM, திரு D. தியாகராஜன், IFA,  திருமதி S. சங்கீதா, SDE, தோழர் G. விஐய் ஆனந்த, JAO, திரு செந்தில் குமார், JTO, SNEA சேலம் மாவட்ட செயலர் தோழர் K. சீனிவாசன், SNEA முன்னாள் மாவட்ட செயலர்கள் தோழர்கள் M. R. தியாகராஜன், R. மனோகரன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். 

SEWA BSNL அமைப்பின் சார்பில், தோழர் பன்னீர்செல்வம் தலைமையில், மாவட்டச் செயலர் தோழர் ஜெயக்குமார், முக்கிய நிர்வாகிகள் தோழர்கள் ரமணி, SDE, சிவச்சந்திரன், JAO, என திரளான SEWA BSNL தோழர்கள், தோழர் K. ராஜன் அவர்களை கௌரவப்படுத்தினார்கள். தோழர் ராஜன் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் கணிசமான அளவில் கலந்து கொண்டார்கள். BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள், திரளாக கலந்து கொண்டது பாராட்டப்பட வேண்டிய ஒரு அம்சம். மொத்தத்தில், CoC சார்பாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று சொன்னால், நிச்சயம் அது வெற்றி பெறும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

BSNLEU சேலம் மெயின் கிளை தோழர்கள், TNTCWU சேலம் நகர கிளை தோழர்கள், வரவேற்பு குழு தோழர்களாக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். சுவையான மதிய விருந்து அன்புடன் பரிமாறப்பட்டது. சிறப்பான பணியை மேற்கொண்ட தோழர்களை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது. தோழர் K. ராஜன் அவர்களின் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய, மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.

வாழ்த்துக்களுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்