வருகிற 31.03.2025 அன்று இலாகா பணி நிறைவு செய்ய இருக்கின்ற, TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K. ராஜன் அவர்களுக்கு, இன்று (29.03.2025) சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் அவரது பிரிவு அதிகாரி திரு செந்தில்குமார், JTO தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து பிரிவு உபசார விழா நடத்தினார்கள்.
BSNLEU சேலம் மெயின் கிளை விழா ஏற்பாடுகளை செய்திருந்தது. பின்னர் இலாகா வாகனத்தில், JTO தலைமையில் ஊழியர்கள், தோழர் K. ராஜன் அவர்களின் இல்லத்திற்கு அழைத்து சென்று சிறப்பு செய்தார்கள்.
இரண்டு நிகழ்விலும், BSNLEU - AIBDPA - TNTCWU மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.