கடந்த 26.03.2025, புதன்கிழமை அன்று, புதிய "மாவட்ட சங்க நிர்வாகிகள்" கூட்டம், BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் R. ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். தோழர் R. ரமேஷ் மாவட்ட பொருளர் அஞ்சலியுரை வழங்க, தோழர் P. சந்திரன், மாவட்ட அமைப்பு செயலர் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்திற்கான ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, மாவட்ட செயலர் தோழர் S. ஹரிஹரன் அறிமுக உரை வழங்கினார். 11வது மாவட்ட மாநாடு சம்மந்தமான பரிசீலனை, 10வது மாநில மாநாட்டு நிகழ்வுகள், புதிய மாவட்ட சங்க நிர்வாகிகள் வேலை பிரிவினை, அமைப்பு நிலை, மாவட்ட அளவிலான பிரச்சனைகள் உள்ளிட்ட விஷயங்கள் ஆய்படு பொருளாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் ஆய்படு பொருள் மீதான விவாதத்தில் பங்கு பெற்றனர்.
AIBDPA தமிழ் மாநில உதவி செயலர் தோழர் E. கோபால், TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விவாதத்திற்கு பதில் அளித்து, மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கிய பின், கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
1. மாநில சங்கம் கொடுக்கும் தேதியில், ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்குள், மாவட்ட செயற்குழு கூட்டத்தை கூட்டுவது.
2. வேலை பகிர்வினை என்கிற அடிப்படையில், புதிய மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு, "கிளைகள்" ஒதுக்கப்பட்டது.
3. புதிய மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட கிளைகளை தொடர்பு கொண்டு பிரச்சனைகளை தொகுத்து அடுத்த மாவட்ட செயற்குழுவில் வழங்குவது
4. மாவட்ட சங்கத்தின், பற்றாக்குறை நிதிநிலை சம்பந்தமாக செயற்குழுவில் முழுமையாக விவாதிப்பது.
5. ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கைகளை வடித்தெடுத்து, நகரப்பகுதி தோழர்களை திரட்டி, TNTCWU மாநில செயற்குழு முடிவின் அடிப்படையில் கூட்டாக மகஜர் வழங்குவது.
மூத்த தோழர் P. செல்வம், நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
தோழர்களின் "பொறுப்பு கிளைகள்" பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. மாத மாதம் கிளை கூட்டங்கள் நடத்துவது, கிளைகளில் இயக்கங்களை வெற்றிகரமாக்குவதற்கு, கிளை செயலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்ட சங்க நிர்வாகிகளை, முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
பட்டியல் காண இங்கே சொடுக்கவும்