Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, March 4, 2025

நிர்வாகத்துடன், மாற்றல் கொள்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது.


BSNL நிர்வாகம், மாற்றல் கொள்கையின்  நகல் ஒன்றை தயாரித்துள்ளது. அதன் மீதான தனது கருத்துக்களை, BSNL ஊழியர் சங்கம், ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக நிர்வாகத்திற்கு வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில், தனது கருத்துக்களை நேரில் தெரிவிக்க, 03.03.2025 அன்று நேரில் வரவேண்டும் என BSNL ஊழியர் சங்கத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டது.  BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P. அபிமன்யு அதில் பங்கேற்று, மாற்றல் கொள்கையின் மீதான கீழ் கண்ட  தனது கருத்துக்களை தெரிவித்தார்.

 (1)   உபரி மாநிலங்களுக்கு, விதி 8ன் கீழ் விருப்ப மாற்றல் கோரி உள்ள அனைத்து JEக்களுக்கும், ஒரு கட்ட நடவடிக்கை என்ற அடிப்படையில், உடனடியாக மாற்றல்கள்  வழங்கிட வேண்டும்.

(2)   காலி பணியிடங்கள் உள்ளதோ இல்லையோ, கணவன் மனைவி இருவரையும் ஒரே இடத்தில் பணியமர்த்தப்பட வேண்டும். இதன் மீதான DoP&T உத்தரவை, கறாராக அமல்படுத்த வேண்டும்.

(3)    எந்த ஒரு ஊழியரையும், OAவை விட்டு வெளியே மாற்றல் செய்யக்கூடாது. (2014க்கு பின்பு தேர்வு செய்யப்பட்ட JEs க்களை தவிர).

(4)  ஊழியர்களை, ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கோ அல்லது ஒரு பதவியில் இருந்து வேறு பதவிக்கோ மாற்றம் செய்வதற்கும், மாற்றம் செய்யப்படாமல் இருப்பதற்குமான உரிமை நிர்வாகத்திற்கு உண்டு என்கின்ற,  BSNL மாற்றல் கொள்கையின் நகலில் உள்ள மூன்றாவது பாராவை, முழுமையாக நீக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரி உள்ளது.

(5)  மூன்று ஆண்டுகள் என்பதற்கு பதிலாக, இரண்டு ஆண்டுகள் கழிந்த பின், ஊழியர்களின் மாற்றல் விண்ணப்பங்கள், பரிசீலிக்க வேண்டும் என கோரப்பட்டது.

(6)   சிறப்பு மற்றும் குறிப்பிட்ட குறைபாடுகள் உள்ள ஊழியர்களுக்கு, மாற்றல் /சுழல் மாற்றல் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

(7) குறைந்தபட்ச குறைபாடுகளை வலியுறுத்தாமல், விபத்தை சந்திக்க கூடிய ஊழியர்களுக்கு, தற்காலிக மாற்றல் வழங்க வேண்டும்.

(8)   பதவி அடிப்படையிலான, பதவி உயர்வுகளிலும், ஊழியர்களை அவர்களின் OAவை விட்டு வெளியே மாற்றம் செய்யக்கூடாது.

(9)  இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த பின், ஊழியர்களுக்கு தற்காலிக மாற்றல் பெற  தகுதி உள்ளவர்களாக ஆக்க வேண்டும். தற்காலிக மாற்றலின் கால அவகாசம் ஐந்தாண்டு காலம் வரை நீட்டிக்க வேண்டும்.

(10) புதிய மாற்றல் கொள்கையை ஓராண்டு காலத்திற்குப் பின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களோடு கலந்தாய்வு செய்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். 

 தோழன் ஹரி 

தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்