ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம், கடைசியாக 19-12-2024 அன்று நடைபெற்றது. அதன்பின், 3 மாத காலம் ஓடிவிட்டது. ஆனால், ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை குழுவின் அடுத்த கூட்டம் நடைபெறவே இல்லை. ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம், 10-03-2025 அன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. எனினும் அந்த கூட்டம் திடீரென ஒத்திவைக்கப் பட்டது. ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் பயிற்சிக்கு சென்றதால், அந்தக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக, நிர்வாகம் கூறியது. ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம் 10.03.2025 அன்று நடைபெறும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பின், அவரை ஏன் நிர்வாகம், பயிற்சிக்கு அனுப்பியது என சாதாரண ஊழியர்கள் கேட்கின்றனர். எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் ஊதியம் மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டத்தை நடத்த, BSNL ஊழியர் சங்கம், அனைத்து விதமான முயற்சிகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் பயிற்சியில் இருந்து வந்த பின், அந்தக் குழுவின் ஒரு உறுப்பினரான PGM(EF), LTC யில் சென்றுள்ளதால், அந்த கூட்டத்தை நடத்த இயலாது என நிர்வாகம், அப்போது கூறியது. தற்போது, ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் நிர்வாக தரப்பு உறுப்பினர்கள் சிலர், விடுப்பில் சென்றுள்ளதால், ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம் நடத்த இயலவில்லை என நிர்வாகம் கூறுகிறது. ஊதிய மாற்ற பிரச்சனை தீர்வு காணப்படாததால், சாதாரண ஊழியர்கள் விரக்தியில் உள்ளனர். அதே சமயம், ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டத்தை நடத்த, நிர்வாகம், எந்த விதமான அக்கறையும் காட்டவில்லை.
இந்தச் சூழ்நிலையில், அதி முக்கியமான பிரச்சனை என்ற அடிப்படையில் ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டத்தை உடனடியாக நடத்தவில்லை எனில், BSNL ஊழியர் சங்கம், போராட்ட இயக்கங்களை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் என BSNL ஊழியர் சங்கம், PGM(SR)க்கு 26.03.2025 அன்று கடிதம் எழுதி உள்ளது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்