Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 6, 2025

சர்வதேச மகளிர் தின சிறப்பு கூட்டம் - ஆத்தூர் கிளை


BSNLEU - AIBDPA - TNTCWU, ஆத்தூர் கிளைகள், CoC சார்பாக, மாதா மாதம் நடத்தும் கிளை கூட்டத்தை, இந்த முறை சர்வதேச மகளிர் தின சிறப்பு கூட்டமாக நடத்தினார்கள். இன்று (06.03.2025), ஆத்தூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு, பெண் தோழர்களை தலைமை குழுவாக தேர்வு செய்து, அவர்கள் தலைமையில், சர்வதேச மகளிர் தின சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள்.

தமிழாக்கம் செய்யப்பட்ட,  BSNLEU மத்திய சங்க சுற்றறிக்கை, சர்வதேச மகளிர் தின செய்தி குறிப்பாக, அனைத்து தோழர்களுக்கும் வழங்கப்பட்டது. இனிப்பு வழங்கி, சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

தோழன் ஹரி