"CCS (ஓய்வூதியம்) விதிகளை சரிபார்த்தல் மற்றும் இந்திய அரசின் தொகுப்பு நிதியில் இருந்து, ஓய்வூதிய கடப்பாடுகளுக்கான செலவுகளுக்கான கொள்கைகள்" என்ற சட்டம், 25.03.2025 அன்று மக்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஊதிய குழுவின் பரிந்துரைகளை அனுபவிக்க, ஓய்வூதியர்களிடையே, பாரபட்சமான பிரிவினையை உருவாக்க அரசாங்கத்திற்கு இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது. இதுவரை, ஊதிய குழுவின் பரிந்துரைகள் எல்லாம், எல்லா ஓய்வூதியர்களுக்கும் ஒரே மாதிரியாக அமலாக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் முதன்முறையாக, ஓய்வூதியர்கள் இடையே பாரபட்சம் காட்டுவதற்கான, கட்டுப்பாடற்ற அதிகாரத்தை மோடி அரசாங்கம், இந்த சட்டத்தின் மூலம் பெற்றுள்ளது. இது ஓய்வூதியர்கள் மீது ஒரு கடுமையான தாக்குதலை மேற்கொள்ளும், பிற்போக்குத் தனமான நடவடிக்கை ஆகும்.
மேலும் இந்தச் சட்டம், 01.06.1972 முதல் பின் தேதியிட்டு அமலாக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளின் கீழ் செய்யப்பட்ட, CCS (PENSION) RULES 1972, 2021 மற்றும் அசாதாரணமான விதிகள் 2023 ஐயும், அவ்வப்போது செய்யப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும், இது செல்லத்தக்கது ஆக்கி விடும்.
இது ஒரு மோசமான ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். அரசு ஓய்வூதியர்களின், நியாயமான ஓய்வூதியத்தை சீர் குலைக்கும் இந்தச் சட்டத்தை, அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோருகிறது.