2025, மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தை கடைபிடிக்க வேண்டும் என, 27.02.2025 அன்று, BSNL ஊழியர் சங்கம், மாநில மற்றும் மாவட்டச் சங்கங்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது. மார்ச் 8ஆம் தேதி, மாவட்ட மட்ட கூட்டங்களை நடத்தி, அதில் பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் விவாதிக்கப்பட வேண்டும் என மத்திய சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இது தொடர்பான சுற்றறிக்கை எண் 25ஐ, 04.03.2025 அன்று, மத்திய சங்கம் வெளியிட்டுள்ளது. அந்த கூட்டங்களில், இந்த சுற்றறிக்கையில் உள்ள பிரச்சனைகளை, பிரதானமாக விவாதிக்க வேண்டும் என மாநில மற்றும் மாவட்ட மட்ட தலைவர்களை, மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
தோழன் ஹரி
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்