அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்காகவும், பன்னாட்டு பாகாசுர நிறுவனமான, சாம்சங் நிறுவனத்தின் பழிவாங்கும் போக்கிற்கு எதிராகவும், தொடர்ச்சியாக போராட்ட களம் கண்டு வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, 07.03.2025 அன்று சேலம் மாவட்ட CoC சார்பாக, சேலம் GM அலுவலகத்தில், மாவட்டம் தழுவிய, மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
போராட்டத்திற்கு, BSNLEU மாவட்ட தலைவர் தோழர் R. சீனிவாசன் தலைமை தாங்கினார். TNTCWU மாவட்ட உதவி செயலர் தோழர் P. செல்வம் விண்ணதிரும் கோஷங்களை, எழுச்சிகரமாக எழுப்பினார்.AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, போராட்டத்தை முறைபடி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். அவரை தொடர்ந்து, TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M. செல்வம், AIBDPA மாவட்ட உதவி செயலர் தோழர் B. சுதாகரன், மூத்த தோழர் தேவா, BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் R. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
AIBDPA தமிழ் மாநில உதவி செயலர் தோழர் E. கோபால், BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் S. ஹரிஹரன், ஆகியோர் கண்டனப் பேருரை வழங்கினார்கள். BSNLEU GM அலுவலக கிளைச் செயலர் தோழர் R. முருகேசன் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். கணிசமான பெண் தோழர்கள் உட்பட திரளான தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தோழன் ஹரி