BSNLலில் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டம், புது டெல்லியில் 10.03.2025 அன்று நடைபெற்றது. BSNLEU, NFTE BSNL, SNEA, AIGETOA, SEWA BSNL, AIBSNLEA, FNTO, BSNL MS, DEWAB மற்றும் GBOWA ஆகிய சங்கங்களின் பொதுச் செயலாளர்கள்/ பிரதிநிதிகள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு, தலைவர், தோழர் சந்தேஸ்வர் சிங், தலைமை தாங்கினார். அமைப்பாளர் தோழர் P.அபிமன்யு, வந்திருந்த அனைவரையும் வரவேற்று, இந்தக் கூட்டத்தில் விவாதிக்க உள்ள ஆய்வோடு பொருட்களை, விளக்கி பேசினார்.
அதிகாரிகளுக்கான சம்பள மாற்றம், ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம், இரண்டாவது விருப்ப ஓய்வு திட்டம், BSNLன் 4G சேவையில் அடைந்துள்ள தோல்வி, மற்றும் ஊழியர்களின் இதர முக்கியமான பிரச்சனைகள் அனைத்தும் விவாதிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து சங்கங்களின் பொதுச் செயலாளர்களும், பிரதிநிதிகளும், விவாதத்தில் பங்கேற்றனர்.
ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் அதிகாரிகளுக்கான சம்பள மாற்றம் ஆகியவை தீர்வு காணப்படாதது தொடர்பாக, அனைத்து தலைவர்களும், தங்களின் மனவருத்தத்தை தெரிவித்தனர். அதேபோல, இரண்டாவது விருப்ப ஓய்வு திட்டத்தையும், அனைத்து தலைவர்களும், கடுமையாக எதிர்த்தனர். தலைவர்கள் பேசும்போது, பல்வேறு போராட்ட வடிவங்கள் தொடர்பான ஆலோசனைகளும் முன் வந்தன. ஆனால், கால அவகாசம் இல்லாததால், இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, 19.03.2025 அன்று மாலை 3 மணிக்கு நடைபெறும்.
தோழன் ஹரி
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்