22.03.2025 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம். 23.03.2025 அன்று தோழர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜ் குரு ஆகியோரின் தியாகிகள் தினம். இந்த இரண்டு தினங்களையும், 2025, மார்ச், 22ஆம் தேதி கொண்டாட வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையம் முடிவு செய்துள்ளது.
மத்திய மாநில சங்கங்களின், இந்த முடிவின் அடிப்படையில், நமது சேலம் மாவட்டத்தில், இந்த நிகழ்ச்சிகளை கிளை சங்கங்கள் வெகு சிறப்பாக நடத்த வேண்டும். கிளைகளில் கொடியேற்றி, வாயில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
அந்தக் கூட்டங்களில், BSNL ஊழியர் சங்கத்தின் சாதனைகளையும், தோழர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் தியாகங்களையும் விளக்கிட வேண்டும். மூன்று தியாகிகளின் படங்களுக்கு மாலை அணிவிக்க வேண்டும் என சேலம் மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது.