ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம், 10.03.2025 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக, அந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 10.03.2025 அன்று, தோழர் P.அபிமன்யு GS BSNLEU, திருமிகு அனிதா ஜோஹ்ரி அவர்களிடம் பேசியபோது, மேலும் காலதாமதம் இன்றி, ஊதிய மாற்ற பேச்சு வாய்ப்பை குழுவின் கூட்டம் அவசரமாக நடத்த வேண்டியதின் அவசியத்தை, அழுத்தமாக கூறினார்.
ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் தலைவரான, திரு ராஜிவ் சோனி, இந்த வாரம் பயிற்சிக்குச் சென்றுள்ளார். இந்தச் சூழ்நிலையில், ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டத்தை, அடுத்த வாரமே நடத்த வேண்டும் என PGM (SR) அவர்களிடம், பொதுச்செயலாளர் வலியுறுத்தி தெரிவித்தார். இதில் தேவையான நடவடிக்கை மேற்கொள்வதாக, PGM (SR) உறுதி அளித்தார்.
தோழன் ஹரி
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்