இன்று (22.03.2025), BSNLEU சங்க 25வது அமைப்பு தினத்தை, நமது மாவட்டத்தில், அனைத்து கிளைகளிலும், எழுச்சியோடு கொண்டாடியதற்கு, சேலம் மாவட்ட சங்கம், தனது செவ்வணக்கங்களை உரித்தாக்குகிறது. ஒன்பது கிளைகளிலும் கொடிகள் ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டு, BSNLEU சாதனைகளை விளக்கி, வாயிற் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தியாகிகள் நினைவு போற்றப்பட்டுள்ளது, பெருமிதமாக உள்ளது. பெரும்பான்மையான இடங்களில், அநேக கிளைகளில், CoC சார்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது தான், நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைய அடித்தளம் அமைத்தது என்பது எதார்த்தமான உண்மை.
சேலம் மாவட்ட சங்க கால் நூற்றாண்டு கால பாரம்பரியத்தை கொஞ்சமும் மாற்றாமல், மறக்காமல், பல மூத்த தோழர்கள், அவரவர் சார்பு கிளைகளில் / பகுதிகளில், அமைப்பு தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டது மகிழ்ச்சியான விஷயம். ஒப்பந்த ஊழியர்கள் பல இடங்களில் சிறப்பான உதவிகள் புரிந்துள்ளனர். கிட்டத்தட்ட 90 சதவீத BSNLEU தோழர்கள், நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளனர்.
வெள்ளி விழா ஆண்டு அமைப்பு தினத்தை வெற்றிகரமாக்கிய, BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று அமைப்புகளின் கிளை சங்கங்கள், மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள், BSNLEU நண்பர்கள், மூன்று சங்க தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கம் மீண்டும் நன்றியை உரித்தாக்குகிறது. BSNLEU மாவட்ட சங்கம் சார்பாகவும், CoC கூட்டமைப்பு சார்பாகவும், நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.