Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 6, 2025

CoC சார்பாக மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்!


நாள்: 07.03.2025, வெள்ளிக்கிழமை, 

நேரம்: நண்பகல் 12.30 மணி அளவில் 

இடம்: சேலம் பொது மேலாளர் அலுவலகம். 


அரசியல் சாசன சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையான, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்காகவும், நிர்வாகத்தின் பழிவாங்கும் போக்கிற்கு எதிராகவும், போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, 07.03.2025 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த BSNLEU தமிழ் மாநில சங்கம் அறைகூவல் கொடுத்தது. AIBDPA, TNTCWU  சங்கங்களும், போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

அதன் அடிப்படையில், நமது மாவட்டத்தில், CoC சார்பாக, சேலம் GM அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெறும். BSNLEU - AIBDPA - TNTCWU சங்கத் தோழர்கள் திரளாக இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தோழன் ஹரி