BSNL ஊழியர்களுக்கு, அனைத்து இலாக்கா தேர்வுகளும் நடைபெற்று வருகின்றது. ஆனால், JAO இலாகா தேர்வு மட்டும், கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. கடைசியாக 2016ஆம் ஆண்டு தான், JAO இலாக்கா தேர்வு நடைபெற்றது. OA, AOS, SOA, JOA உள்ளிட்ட Sr.TOA கேட்டரில் உள்ளவர்களுக்கு, JAO இலாகா தேர்வு மட்டுமே, முக்கியமான பதவி உயர்வு வாய்ப்பு.
JAO இலாகா தேர்வு நடைபெறாமல் இருப்பதால், இந்தப் பிரிவில் உள்ள ஊழியர்கள், மனச்சோர்வும், விரக்தியும் அடைந்துள்ளனர். BSNL ஊழியர் சங்கம், இந்தப் பிரச்சினையை ஏற்கனவே பலமுறை, BSNL நிர்வாகத்திடம் எடுத்துச் சென்று விவாதித்துள்ளது. இலாகா தேர்வை விரைவில் நடத்துவதற்கு தேவையான விரைவான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, BSNL ஊழியர் சங்கம், இன்று (06.03.2025), DIRECTOR (FINANCE) மீண்டும் ஒரு கடிதம் எழுதி உள்ளது.
தோழன் ஹரி
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்