BSNLEU அகில இந்திய சங்கத்தின் பொருளாளராகவும், சட்டிஸ்கர் மாநில செயலாளராகவும், இருந்த தோழர் S.C.பட்டாச்சாரியா, ராய்ப்பூர் மருத்துவமனையில், 02.04.2025 அன்று முற்பகல் 11.45 மணிக்கு காலமானார் என்பதை, வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
சட்டிஸ்கர் மாநிலத்தில் BSNL ஊழியர் சங்கத்தை, நிர்மாணித்து, பலப்படுத்த, தோழர் S.C.பட்டாச்சாரியா பெரும் பங்காற்றியுள்ளார். அகில இந்திய சங்கத்தின் பொருளாளராக அவர் ஆற்றிய பங்கு பாராட்டுக்குரியது. தோழர் S.C. பட்டாச்சாரியா அவர்களுக்கு, சேலம் மாவட்ட சங்கம், அஞ்சலி செலுத்துகிறது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.