ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம் நடைபெறுவது அதீத காலதாமதம் ஆகி வருகிறது. இந்தப் பிரச்சனையின் மீதான தனது அதிருப்தியை, ஏற்கனவே BSNL ஊழியர் சங்கம், நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (02.04.2025), Dr. கல்யாண் சாகர் நிப்பானி DIRECTOR (HR) அவர்களிடம் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு விவாதிக்கையில், மேலும் காலதாமதம் இன்றி ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் கூட்டத்தை நடத்திட, அவரது தலையீட்டை கோரி உள்ளார். இந்தப் பிரச்சினையில் தலையிட DIRECTOR (HR) ஏற்றுக் கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு, இன்றைய தினம் (03.04.2025), PGM (SR) திருமிகு அனிதா ஜோஹ்ரி அவர்களிடம் விவாதிக்கும்போது, DIRECTOR (HR) அவர்களுடன் பேசிய விவரங்களை தெரிவித்தார். மேலும், ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் கூட்டத்தை, அடுத்த வாரம் எந்த தேதியிலாவது நடத்த வேண்டும் என PGM (SR) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
ஊதிய பேச்சுவார்த்தை குழுவில் உள்ள நிர்வாக தரப்பு உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்ட பின்பு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, PGM (SR) உறுதியளித்தார்.